Kangal Neeye
Listen online or download Kangal Neeye Song in MP3 by Sithara Krishnakumar
Kangal Neeye Song Lyrics
கண்கள் நீயே பாடல் வரிகள் :
பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே தூணும்
நீ துரும்பில் நீ
பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே ஊனும் நீ
உயிரும் நீ
பெண் : பல நாள்
கனவே ஒரு நாள்
நனவே ஏக்கங்கள்
தீா்த்தாயே
பெண் : எனையே பிழிந்து
உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
பெண் : முகம் வெள்ளை
தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான்
செய்தேன் கண்ணே
பெண் : இதழ் எச்சில்
நீா் எனும் தீா்த்ததால்
அதில் திருத்தங்கள் நீ
செய்தாய் கண்ணே
பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே தூணும்
நீ துரும்பில் நீ
பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே ஊனும் நீ
உயிரும் நீ
பெண் : இந்த நிமிடம்
நீயும் வளா்ந்து என்னை
தாங்க ஏங்கினேன்
பெண் : அடுத்தக்கணமே
குழந்தையாக என்றும்
இருக்க வேண்டினேன்
பெண் : தோளில் ஆடும்
சேலை தொட்டில் தான்
பாதிவேளை
பெண் : பலநூறு மொழிகளில்
பேசும் முதல் மேதை நீ
இசையாக பலபல ஓசை
செய்திடும் இராவணன்
ஈடில்லா என்மகன்
பெண் : ம்ம்ம் … ம்ம்ம் … ம்ம்ம்ம்
பெண் : எனைத்தள்ளும்
முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான்
கண்டேன் கண்டேன்
பெண் : எனைக்கிள்ளும்
முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான்
தந்தேன் கண்ணே
பெண் : என்னை விட்டு
இரண்டு எட்டு தள்ளிப்
போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி
எடுத்து கருவில் வைக்க
நினைக்கிறேன்
பெண் : போகும்
பாதை நீளம்
கூரையாய் நீலவானம்
பெண் : சுவா் மீது
கிறுக்கிடும் போது
ரவிவா்மன் நீ பசி
என்றால் தாய் இடம்
தேடும் மானிட மா்மம்
நீ நான் கொள்ளும் கா்வம் நீ
பெண் : கடல் ஐந்தாறு
மலை ஐநூறு இவை
தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
பெண் : உடல் செவ்வாது
பிணி ஒவ்வாது பல நூறாண்டு
நீ ஆள்வாய் மண்ணை
பெண் : கண்கள் நீயே
காற்றும் நீயே தூணும்
நீ துரும்பில் நீ
பெண் : வண்ணம் நீயே
வானும் நீயே ஊனும் நீ
உயிரும் நீ
Disclaimer: All audio Tracks shared on thenaatsharif.com are uploaded with permission from their rightful copyright owners. If you believe any of your copyrighted material appears here without authorization, please reach out with a copyright complaint, and we will remove it right away.
